spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சூது கவ்வும் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

‘சூது கவ்வும் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

சூது கவ்வும் 2 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2013இல் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டார்க் காமெடி ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றுவரையிலும் இப்படம் பலரின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது.'சூது கவ்வும் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

we-r-hiring

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். மேலும் ராதாரவி கருணாகரன் உள்ளிட்ட பலரும் மிர்ச்சி சிவா உடன் இணைந்து நடித்துள்ளனர். எம் எஸ் அர்ஜுன் சூது கவ்வும் 2 படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தை தங்கம் சினிமாஸ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 'சூது கவ்வும் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

MUST READ