spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரிலீஸுக்கு தயாராகும் சூரியின் 'கொட்டுக்காளி'..... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரிலீஸுக்கு தயாராகும் சூரியின் ‘கொட்டுக்காளி’….. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களை நகைச்சுவை நடிகராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ரிலீஸுக்கு தயாராகும் சூரியின் 'கொட்டுக்காளி'..... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அடுத்ததாக இவர் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர் கருடன் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் சூரி ஆக்சன் ஹீரோவாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் கொட்டுக்காளி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் சூரியுடன் இணைந்து மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதனை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பி சக்திவேல் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ரிலீஸுக்கு தயாராகும் சூரியின் 'கொட்டுக்காளி'..... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!மேலும் இந்த படத்தை 200 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ