ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில், எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அதே சமயம் இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். அடுத்தது இவர் சூர்யா 45 திரைப்படத்தை இயக்கப் போகிறார். இதற்கிடையில் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வரும் ஆர்.ஜே. பாலாஜி, சொர்க்கவாசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி உடன் இணைந்து கருணாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கிறார். ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசையமைத்துள்ளார். அடுத்தது பிரின்ஸ் ஆண்டர்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
#Sorgavaasal pic.twitter.com/9xyx8gQBfU
— RJ Balaji (@RJ_Balaji) November 8, 2024

மேலும் இந்த படமானது நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் இன்று (நவம்பர் 8) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அப்டேட் ரிலீஸ் குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.