spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலிவுட் செல்லும் மகேஷ்பாபு பட நடிகை... வாரிசு நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தம்...

பாலிவுட் செல்லும் மகேஷ்பாபு பட நடிகை… வாரிசு நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தம்…

-

- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வௌியான திரைப்படம் குண்டூர் காரம். இப்படத்தை திருவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் மகேஷ்பாபு மற்றொரு நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருப்பார். தெலுங்கில் முன்னணி நடிகையாக அவர் வலம் வருகிறார். குண்டூர் காரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring
அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி, மற்றும் விஜய் நடிக்கும் கோட் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை ஸ்ரீ லீலாவுக்கு பாலிவுட் பக்கத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அவர் விரைவில் இந்தி சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் சைஃப் அலிகானின் மகன் இப்ராஹிம் அலிகான் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். காதல் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. சைஃப் அலிகானின் மூத்த மகள் சாரா அலிகான் ஏற்கனவே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தனுஷூடன் சேர்ந்து அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ