spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவேட்டையன் படத்தின் சாட்லைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி குழுமம்

வேட்டையன் படத்தின் சாட்லைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி குழுமம்

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் சாட்லைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில்இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதோடு சுமார் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்

we-r-hiring
இதில், ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, புதுச்சேரி, ஆந்திரா, என மாறி மாறி நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

வரும் அக்டோபர் மாதம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் சாட்லைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி கைப்பற்றி இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ