Homeசெய்திகள்சினிமாபழந்தமிழர் நாகரித்தை காண ஆர்வமாக வந்த சூர்யா, ஜோதிகா!

பழந்தமிழர் நாகரித்தை காண ஆர்வமாக வந்த சூர்யா, ஜோதிகா!

-

நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மதுரையில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதிகாச படமாக உருவாகும் இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்.

suriya
suriya

இதற்கிடையில் நடிகை ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கீழடியில் உள்ள அகழ்வாராய்ச்சி அருங்காட்சியதற்கு அமைச்சர் சு வெங்கடேசன் உடன் வருகை புரிந்துள்ளனர். ஊழியர்களுடன் அவர்கள் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா 42 திரைப்படம் பழந்தமிழர் காலத்தில் நடந்த கதை எனவும், சூர்யா அதில் மிக முக்கியமான மன்னர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர்கள் தற்போது கீழடி சென்றிருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ