- Advertisement -
சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் 3D அனிமேஷனில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
