spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா தயாரிப்பில் நடிக்கும் சூரி... விலங்கு தொடர் இயக்குநருடன் கூட்டணி...

சூர்யா தயாரிப்பில் நடிக்கும் சூரி… விலங்கு தொடர் இயக்குநருடன் கூட்டணி…

-

- Advertisement -
கருடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விலங்கு தொடர் இயக்குநருடன் நடிகர் சூரி கூட்டணி அமைக்க உள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் நடிகர் சூரியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி இன்று வரை சூரியின் திரைவாழ்வில் முக்கியமான ஒன்று. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார்.

we-r-hiring
நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முதல் முறையாக நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அத்துடன் படத்தின் வெற்றி விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் சூரி நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விலங்கு தொடரை இயக்கிய பிரசாந்த் இயக்கும் புதிய படத்தில் சூரி நடிக்கவுள்ளதாகவும், இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலில் சூர்யா நடிப்பதாக இணையத்தில் பேசப்பட்ட செய்தி வதந்தி என்றும், இப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை, அதற்கு மாறாக தயாரிக்கிறார் என்றும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

MUST READ