ஆட்டோவில் பயணித்த டாப்ஸி… விரட்டிச் சென்ற ரசிகர்களுக்கு அறிவுரை…
- Advertisement -

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும், அவர் தமிழ் மொழியிலும் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர். தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், வலை, ஆரம்பம், வை ராஜா வை, முனி 3, கேம் ஓவர், திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அப்படத்தில் நடித்திருப்பார்.

தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இந்தியிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இந்தியிலும் அவர் டாப் நடிகையாக வலம் வருகிறார். இறுதியாக ஷாருக்கான் நடித்த டன்கி படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார். திரைப்படங்களில் மட்டுமன்றி அவ்வப்போது, சமூக பிரச்சனைகள் தொடர்பாகவும் டாப்ஸி குரல் கொடுத்து வருகிறார். இந்தி திணிப்பு உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் குறித்தும் நடிகை டாப்ஸி பேசி உள்ளார்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி மும்பை மாநகராட்சியில் ஆட்டோவில் சென்றிருக்கிறார். அவரைக் கண்ட ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கின்றனர். இதைக் கண்ட நடிகை டாப்ஸி, தயவுசெய்து வாகனத்தில் மெதுவாக செல்லுங்கள், விபத்திக் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.