Homeசெய்திகள்சினிமாகுளோபல் ஸ்பா பத்திரிகையில் தமன்னா... அசத்தல் புகைப்படங்கள்....

குளோபல் ஸ்பா பத்திரிகையில் தமன்னா… அசத்தல் புகைப்படங்கள்….

-

நடிகை தமன்னா பான் இந்தியா அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக சினிமாத் துறையில் இருக்கும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்போது இந்த நடிகருடன் உறவில் இருக்கிறார் என்று செய்திகள் கிளம்பும். அந்த வகையில் சமீப காலமாக தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது.

இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர். அப்படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் தமன்னா நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா மட்டுமன்றி இந்தியிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் இரண்டு இணைய தொடர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

இந்நிலையில், நடிகை தமன்னா உலக புகழ்பெற்ற குளோபல் ஸ்பா பத்திரிகையின் அட்டை பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். பத்திரிக்கைகாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

MUST READ