spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாவாலா பாடலுக்கு அளவில்லா ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி........ நடிகை தமன்னா!

காவாலா பாடலுக்கு அளவில்லா ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி…….. நடிகை தமன்னா!

-

- Advertisement -

நடிகை தமன்னா காவாலா பாடலுக்கு ஆதரவளித்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினி மற்றும் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸுக்காக இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி தமன்னாவின் துள்ளலான நடனத்தில் காவாலா எனும் முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த பாடலுக்காக பலரும் ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில்,”நம்ப முடியாத அளவிற்கு காவாலா பாடல் ஆதரவை பெற்றுள்ளது. திரைப்படங்களில் நான் செய்யும் பணிகளுக்காக இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் அன்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. என் அடி மனதில் இருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” இன்று நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான ஹுக்கும் பாடலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ