ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை டாக்டர் விசு உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் தமன்னா மோகன்லால் சிவராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் இந்த படத்தில் முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதனால் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்சனின் வழக்கமான பாணியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அனவுன்ஸ்மென்ட் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அந்த புரோமோவில் ‘காவாலா’ ஃபர்ஸ்ட் சிங்கள் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
It’s time to vibe for #Kaavaalaa 💃🏼. Lyric video is out now!💥
▶️ https://t.co/Pd7nBg8h4l@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer #JailerFirstSingle
— Sun Pictures (@sunpictures) July 6, 2023
அதன்படி, தற்போது தமன்னா நடனமாடும் ‘ரா என் ராவெல்லாம் லாங் ஆவுதே’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது. தமிழும் தெலுங்கு கலந்து உருவாகியுள்ள இந்தப் பாடலை அருண் ராஜா காமராஜ் எழுத சில்பா ராவ் பாடியுள்ளார்.