spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகண்ணமே என் கண்ணால... டிரெண்டிங் பாடலுக்கு ஒரு ஆட்டம் போட்ட சிம்ரன்...

கண்ணமே என் கண்ணால… டிரெண்டிங் பாடலுக்கு ஒரு ஆட்டம் போட்ட சிம்ரன்…

-

- Advertisement -
டிரெண்டிங்கில் உள்ள கண்ணமே என் கண்ணால என்ற பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனம் ஆடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

90 மற்றும் 2000 களில் இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகி சிம்ரன். இவரது நடிப்புக்கு மட்டுமன்றி நடனத்திற்கும் ரசிகர்கள் ஏராளம். நடிப்புக்கு சில நடிகைகள் பிரபலம், தோற்றத்திற்கு சில நடிகைகள் பிரபலம், நடனத்திற்கு சில நடிகைகள் பிரபலம் அதே போல, இடுப்பை வளைத்து வளைத்து ஆடுவதில் நடிகை சிம்ரன் பிரபலம். தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் சிம்ரன் நடித்துள்ளார். ரஜினி, கமல்ஹாசன், விஜய், பிரசாந்த், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இறுதியாக தமிழில் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் விக்ரம், மற்றும் துருவ் விக்ரம் நடித்திருந்தனர். சிம்ரன் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. தற்போதும் சிறந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சிம்ரன், குடும்பம், குழந்தைகள் மற்றும் ஹோட்டல் என பிசியாக இயங்கி வருகிறார். அவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வௌியீட்டுக்கு காத்திருக்கிறது.
we-r-hiring

படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிம்ரன், இடையே தனது பிடித்த மற்றும் டிரெண்டிங் பாடலுக்கு நடனமும் ஆடி அசத்தி வருகிறார். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது, டிரெண்டிங்கில் உள்ள கண்ணமே என் கண்ணால என்ற பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனம் ஆடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ