- Advertisement -
தனக்கு திருமண நிச்சயம் நிறைவு பெற்றதாக நடிகை சுனைனா, புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நடிகைகள் பீக்கில் இருப்பது வழக்கமாகும். இதில் ஒரு சிலருக்கு தொடக்கத்தில் கிடைக்கும் வரவேற்பு அப்படியே நீடிப்பதில்லை. அப்படி ஒரு கட்டத்தில் பீக்கில் இருந்த நடிகை தான் சுனைனா. இவர் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்க காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு வந்தார் நடிகை சுனைனா. முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், கோலிவுட்டில் சுனைனாவுக்கான இடம் ஒதுக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் நகுலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அத்திரைப்படம் மாசிலாமணி. இதையடுத்து, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, உள்பட பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.



