spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை.... ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்... ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?

தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை…. ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்… ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?

-

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் ‘உப்பன்னா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை.... ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்... ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?இவர் வாரியர் படத்தில் இடம்பெற்ற ‘புல்லட்’ பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் தமிழிலும் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் தமிழில் நடித்துள்ள படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதுவரை இவர் தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை.... ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்... ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?

வா வாத்தியார்

we-r-hiring

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். நலன் குமாரசாமியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் 2025 டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐகே

எல்ஐகே திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். க்ரித்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் ஜானரில் காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் 2025 டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை.... ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்... ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?

ஜீனி

ரவி மோகன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் தான் ஜீனி. இந்தப் படத்தில் ரவி, தேவயானி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் இணைந்து க்ரித்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு க்ரித்தி ஷெட்டியின் கைவசம் 3 தமிழ் படங்கள் இருக்கும் நிலையில், இந்த மூன்று படங்களுமே ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. எனவே மூன்று படங்களும் க்ரித்தி ஷெட்டிக்கு வெற்றி படங்களாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ