Homeசெய்திகள்சினிமாவசந்த பாலனின் தலைமைச் செயலகம்... இணைய தொடரின் டீசர் வௌியீடு...

வசந்த பாலனின் தலைமைச் செயலகம்… இணைய தொடரின் டீசர் வௌியீடு…

-

- Advertisement -
வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இணைய தொடரின் முதல் தோற்றம் மற்றும் டீசர் வெளியாகி இருக்கிறது.

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்த பாலன், வெயில் படத்திற்காக தேசிய விருதை வென்றார். நீண்ட இடைவௌிக்கு பிறகு அண்மையில் வசந்த பாலன் படம் இயக்கினார். அநீதி என்ற அத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இணைய தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். தலைமைச் செயலகம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன், ஸ்ரேஷா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த இணைய தொடர் உருவாகி உள்ளது. ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து இந்த தொடரை தயாரித்து உள்ளனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகம் தொடரின் முதல் தோற்றம் மற்றும் அதன் டீசர் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்த தொடர் வரும் மே மாதம் 17-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

MUST READ