ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்து வருகிறது. ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பாக இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினி தற்போது சென்னை திரும்பி உள்ளார்.
இதன் பிறகு தனது ரஜினி 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இதை தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 3 வது வாரத்தில் சென்னையில் ஆரம்பமாகும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.