Homeசெய்திகள்சினிமா'தலைவர் 170' படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்!

‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்!

-

ரஜினி தற்போது நடித்துள்ள 169 வது படமான ஜெயிலர் திரைப்படம் 375 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து ரஜினி தனது 170 ஆவது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று
கூறப்படுகிறது.இருந்த போதிலும் இது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.மேலும் இதன் கூடுதல் தகவலாக, படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தின் டைட்டில் வேட்டையன் என்று வைக்க வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியானால்தான் இதற்கான பதில் கிடைக்கும். ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ