- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஜெய் பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இதனை தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படம் சம்பந்தமான அறிவிப்புகளை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் துஷாரா விஜயன் தலைவர் 170 இணைந்துள்ளார் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்னும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.