ஹிட் 3 வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர். இவர் தமிழில் வெப்பம், ஈ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர், மீண்டும் தமிழில் புதிய படம் ஒன்றில் நடக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் தி பாரடைஸ் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவரது நடிப்பில் நேற்று (மே 1) ஹிட் 3 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கியிருந்தார். இதனை வால் போஸ்டர் சினிமா நிறுவனமும், அன்அனிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இதில் நானியுடன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வன்முறை காட்சிகள் நிறைந்த கிரிமினல் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் நானி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
SARKAAR’S BOX OFFICE MAYHEM collects a whopping 43+ CRORES GROSS WORLDWIDE on DAY 1 💥💥
Natural Star @NameisNani‘s HIGHEST DAY 1 GROSSER 🔥#HIT3 is the #1 INDIAN FILM WORLDWIDE YESTERDAY ❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/8HrBsV0Ry1#BoxOfficeKaSarkaar… pic.twitter.com/IEuNsxZ5Sn— Wall Poster Cinema (@walpostercinema) May 2, 2025

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது நடிகர் நானியின் சினிமா கேரியரில் அதிக வசூலை வாரி குவித்த படம் என்ற சாதனையை ஹிட் 3 திரைப்படம் படைத்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.