டூரிஸ்ட் ஃபேமிலி குட்டி பையன் கமலேஷ் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த மே 1 அன்று திரையரங்குகளில் வெளியான படங்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ஒன்று. இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் இணைந்து மிதுன், கமலேஷ், ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருந்தார். பொருளாதார கஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை சமாளித்து எப்படி புதிய வாழ்க்கையை தொடங்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் இந்த படத்தில் நடித்த குட்டி பையன் கமலேஷ் நடிப்பில் மற்றவர்களை தூக்கி சாப்பிட்டு விட்டான். இந்த படத்தில் சசிகுமாருக்கு அடுத்ததாக அந்த குட்டி பையன் தான் ஹீரோ என பலரும் கமலேஷை பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் கமலேஷ்.
TouristFamily Kamalesh:
“My upcoming films are #Kanchana4 & #JasonSanjay project. Jason na is Sweetest person on set, i didn’t even see him shouting♥️. I have asked Jason Anna about 50 questions in 3 days, whether if he likes his Father or Mother etc😀”pic.twitter.com/QuZuUdbUub
— AmuthaBharathi (@CinemaWithAB) May 3, 2025
இந்நிலையில் கமலை சமீபத்தில் நடந்த பேட்டியில், “அடுத்ததாக நான் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும், ஜேசன் சஞ்சய் இயக்கம் புதிய படத்திலும் நடிக்கிறேன். ஜேசன் அண்ணா படப்பிடிப்பு தளத்தில் கத்துவதை நான் பார்த்ததில்லை. அவர் மிகவும் இனிமையான நபர். அவரிடம் மூன்று நாட்களில் 50 கேள்விகள் கேட்டிருப்பேன். அப்பாவை பிடிக்குமா? அம்மாவை பிடிக்குமா? என்று. எல்லாத்துக்கும் அவர் என்னிடம் பொறுமையாக பதில் சொல்வார்” என்று தெரிவித்துள்ளார்.