பிரபல இசையமைப்பாளர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், மிதுன், கமலேஷ் ஆகியோரின் நடிப்பில் நேற்று (மே 1) திரையிடப்பட்ட படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஷான் ரோல்டனின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து, தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் எப்படி பல சிக்கல்களைத் தாண்டி புதிய வாழ்க்கையை தொடங்குகிறது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை நகைச்சுவையாகவும், உணர்வுபூர்வமாகவும் எடுத்து இருக்கிறார் அபிஷன். இதுதான் அபிஷனின் முதல் படம் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு எதார்த்தமான இயக்கம், வலுவான கன்டென்ட், கதாபாத்திரங்களின் தேர்வு ஆகியவற்றை ஒரு அனுபவம் மிக்க இயக்குனரைப் போல் கையாண்டுள்ளார்.
watched #TouristFamily and my heart is full! Such a beautifully made film that perfectly blends emotion and humor.Big congratulations to the entire team for creating such a heartwarming experience. @MillionOffl @Yuvrajganesan @RSeanRoldan @sasikumardir @SimranbaggaOffc…
— G.V.Prakash Kumar (@gvprakash) May 1, 2025
எனவே இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். என் இதயம் நிறைந்து விட்டது. உணர்ச்சியையும், நகைச்சுவையையும் சரியாக கலந்து மிகவும் அழகாக உருவாக்கப்பட்ட படம். இவ்வளவு மனதைக் கவரும் அனுபவத்தை உருவாக்கியதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.