spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிப்பாதையில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... முதல் நாள் வசூல் குறித்த தகவல்!

வெற்றிப்பாதையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’…. முதல் நாள் வசூல் குறித்த தகவல்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.வெற்றிப்பாதையில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... முதல் நாள் வசூல் குறித்த தகவல்!

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இதனை குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படமானது இலங்கையிலிருந்து பொருளாதார கஷ்டம் காரணமாக சென்னைக்கு வரும் குடும்பம் தங்களின் கவலைகளை மறைத்து எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பது நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ‘மனிதநேயம் இருக்கும் இடத்தில் அகதிகள் என்ற சொல்லுக்கு இடமில்லை’ என்பதை அழுத்தமாக கூறியுள்ளார். வெற்றிப்பாதையில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... முதல் நாள் வசூல் குறித்த தகவல்!இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. படத்தில் சசிகுமார், சிம்ரன் மட்டுமல்லாமல் மிதுன், கமலேஷ் ஆகியோரின் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகின்றனர். இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

MUST READ