Homeசெய்திகள்சினிமாவிஜே சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்.... டைட்டிலே பயங்கரமா இருக்கே!

விஜே சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்…. டைட்டிலே பயங்கரமா இருக்கே!

-

- Advertisement -

விஜே சித்து இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜே சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்.... டைட்டிலே பயங்கரமா இருக்கே!

யூடியூப் சேனலின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் விஜே சித்து. இவருடைய வீடியோக்கள் பெரும்பாலும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் இவர் போடும் வீடியோ மில்லியன் பார்வைகளை கடந்து லைக்ஸ்களையும் அள்ளும். அதுமட்டுமில்லாமல் இவருடைய நண்பன் ஹர்ஷத் கானும் பிரபலமானவர்தான். இருவரும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து அசத்தியிருந்தனர். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் புதிய படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. அதன்படி அந்த படத்தினை விஜே சித்து தானே இயக்கி, நடிக்கப் போவதாகவும், இந்த புதிய படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க போவதாகவும் சொல்லப்பட்டது. தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கலகலப்பான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு டயங்கரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவையும் தலைப்பையும் பார்க்கும்போதே இந்த படம் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ