Homeசெய்திகள்சினிமாமுதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?.... 'ரெட்ரோ' படக்குழுவின் புதிய அறிவிப்பு!

முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?…. ‘ரெட்ரோ’ படக்குழுவின் புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

ரெட்ரோ படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?.... 'ரெட்ரோ' படக்குழுவின் புதிய அறிவிப்பு!

சூர்யாவின் 44 வது படமாக உருவாகி இருந்த ரெட்ரோ திரைப்படம் நேற்று (மே 1) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க வில்லனாக ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், விது ஆகியவரும் நடித்துள்ளனர். நடிகை ஸ்ரேயா ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தமிழ்நாட்டில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காதல் கலந்த கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?.... 'ரெட்ரோ' படக்குழுவின் புதிய அறிவிப்பு!இருப்பினும் ‘கங்குவா’ படத்திற்கு பிறகு வெளியான இந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதன்படி இப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ.30 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.75 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

MUST READ