ரெட்ரோ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் நேற்று (மே 1) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படம் சூர்யாவின் 44 வது திரைப்படமாகும். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜூம், சூர்யாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு சிறப்பு. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் பட்டையை கிளப்பி உள்ளது. பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் மிரட்டி இருக்கிறார். அதன்படி முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சில சொதப்பல்கள் இருக்கிறது. எனவே இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.