Homeசெய்திகள்சினிமாஅட்ரா சக்க.. தளபதி 68 படத்தோட டைட்டில் இதுதானா… பான் இந்தியா ஹிட் தான் அப்போ!

அட்ரா சக்க.. தளபதி 68 படத்தோட டைட்டில் இதுதானா… பான் இந்தியா ஹிட் தான் அப்போ!

-

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 68 வது படத்தை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா, ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து விஜய் படத்திற்கு இசையமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக தமன்னா,கிரித்தி செட்டி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அது மட்டும் இல்லாமல் எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படம் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ திரைப்படத்தைப் போன்றே அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு CSK என்ற தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நம்ம Chennai Super Kings அணிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே CSK என்று தலைப்பு வைத்தால் படம் பான் இந்தியா ஹிட் தான்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் தொடர்பான மற்ற அறிவிப்புகள் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ