தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியுள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதாவது கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை பின்னணியாக கொண்டிருந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் விக்ரம் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆர்கே செல்வா இதன் எடிட்டிங் பணிகளை கவனிக்க கிஷோர் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ட்ரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. மேலும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான மினிக்கி மினிக்கி எனும் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.