spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருமேகங்கள் கலைகின்றன'..... ட்ரெய்லர் வெளியானது!

தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’….. ட்ரெய்லர் வெளியானது!

-

- Advertisement -

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது.
தங்கர் பச்சான் அழகி, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை, களவாடிய பொழுதுகள், உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சிறுகதைகளை தழுவி உருவாக்கப்பட்டது.
உணர்வுபூர்வமான சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அதை தழுவி படமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளிப்பது மட்டுமில்லாமல் மெய்சிலிர்க்க வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது கருமேகங்கள் கலைகின்றன எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படமும் மேகங்கள் கலைகின்றது என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஏஓ மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிதுள்ள இத படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

we-r-hiring

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள், கிளிம்ஸ் முதலானவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை மேனாள் நீதியரசர் திரு. சந்திரு அவர்கள் வெளியிட்டுள்ளார். பாரதிராஜா இந்த படத்தில் நீதி அரசரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மண் மணம் மாறாத திரைகதையில் இப்படம் உருவாகியுள்ளது. தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ