தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகன் தனுஷ். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். மொத்த திரையுலகமும் கொண்டாடும் நாயகனாக தனுஷ் உயர்ந்துள்ளார். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. அதே சமயம் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் D51 படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவரே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அண்மையில் புஷ்பா படத்திற்காக இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.