பிரபல இயக்குனர் ஒருவர், கவினுக்காக கிஸ் பட டைட்டிலை விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்த பின்னர் வெள்ளித்திரைகளும் களமிறங்கி முக்கியமான நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் தற்போது கிஸ் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் ரொமான்டிக் – காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய கவின், “கிஸ் படத்தின் டைட்டிலை நாங்கள் இயக்குனர் மிஷ்கினிடம் இருந்து தான் பெற்றோம். அவர்தான் முதலில் இந்த டைட்டிலைட் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் நானும், இயக்குனர் சதீஷும் அவரை சந்தித்து கதையைப் பற்றி விளக்கினோம். உடனே அவர் இந்த டைட்டிலை தந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.