Homeசெய்திகள்சினிமாமீண்டும் பிரபாஸ் உடன் போட்டி போடும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' இயக்குனர்!

மீண்டும் பிரபாஸ் உடன் போட்டி போடும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குனர்!

-

பாலிவுட் பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி மீண்டும் பிரபாஸ் உடன் மோத தயாராகி உள்ளதாக தெரிகிறது.

பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படத்தின்  மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்த படம் உலகளவில் பேசுபொருளானது. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ படத்துடன் பாக்ஸ் ஆபிஸ் போட்டி போட்டது.

ராதே ஷ்யாம் படத்திற்கு படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. 100 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி மீண்டும் பிரபாஸுடன் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தத் தயாராகி உள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது அதே நாளில் விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி வேக்ஷின் வார்'( The Vaccine War) என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே சலாருடன் போட்டி போட விரும்பாமல் பல படங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ள நிலையில் அதே நாளில் தனது படம் வெளியாக இருப்பதாக விவேக் அறிவித்துள்ளார்.

இந்த முறை யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

MUST READ