லெஜண்ட் சரவணன் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள விடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக காலடி தடத்தை எடுத்து வைத்தார். முதல் படமே இவருக்கு ஆஹா ஓஹோ என பெயர் பெற்றுத் தந்தது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம், நெகட்டிவ் விமர்சனம் என்பதைத் தாண்டி அனைத்து தமிழக மக்களையும் மீம்ஸ் மூலமாக சென்றடைந்தார் சரவணன்.
தற்போது இவரின் மூலமாக கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். தொழில்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கி வெற்றி நடைப்போட்டு வரும் இவர் இன்று 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் விழாவை கொண்டாடி தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது
விஜய் அஜித்தின் அடுத்த படத்திற்கு காத்திருப்பது போல தற்போது லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்திற்கும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சரவணன் குழந்தைகளுடன் அந்த நாளை கொண்டாடியுள்ளார்.
குழந்தைகளுடன் அவர் ஜாலியாக பாட்டு பாடி, ஆட்டம் போட்டு கொண்டாடிய அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அது மட்டுமல்லாமல் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
உங்களது அடுத்த படம் எப்போது என்று ஒரு சிறுவன் கேட்க “நல்ல கதைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். இப்போ அப்படியான ஒரு கதை கிடைச்சிருக்கு. எனவே சீக்கிரமா படத்தை எடுக்க வேண்டியது தான்” என்று உற்சாகமாக பதில் அளித்துள்ளார்.