Homeசெய்திகள்சினிமாதிரிஷாவின் 'தி ரோட்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

திரிஷாவின் ‘தி ரோட்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

-

- Advertisement -

தி ரோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு திரிஷா தனது ஸ்டார் அந்தஸ்தினை திரும்ப பெற்றுள்ளார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ள தி ரோட் திரைப்படத்தில் நடித்துள்ளார் . AAA சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு அமைத்துள்ளார். இதில் திரிஷாவுடன் இணைந்து மியா ஜார்ஜ், சபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. மேலும் சமீபத்தில் தி ரோட் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தில் ஓ விதி எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதனால் ரசிகர்கள் மத்தியில் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

MUST READ