தி ரோட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தி ரோட். இந்தப் படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். இதில் திரிஷாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் சபீர், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். AAA சினிமா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.
மதுரையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.
Here’s presenting the trailer of the intense and thrilling❤🔥 #TheRoadTrailer
In (Tamil-Telugu-Hindi)👉🏻https://t.co/Z4PZut7vpd#RevengeFromOct6#TheRoad@aaa_cinemaa@trishtrashers @actorshabeer@Actorsanthosh @actorvivekpra @Arunvaseegaran1 @SamCSmusic @tipsofficial
— AAA_CINEMAA (@aaa_cinemaa) September 21, 2023
இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்த ட்ரெய்லரின் மூலம் இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மிரட்டலான பின்னணி இசை உடன் வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.