Homeசெய்திகள்சினிமா'STR 48' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...... ரசிகர்கள் அதிர்ச்சி!

‘STR 48’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…… ரசிகர்கள் அதிர்ச்சி!

-

- Advertisement -

நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். 'STR 48' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...... ரசிகர்கள் அதிர்ச்சி!அதன்படி இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் நடிகர் சிம்பு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் எனவும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படம் பீரியாடிக் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. தற்போது வரையிலும் இதன் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் STR 48 திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் மற்றொரு பக்கம் செய்திகள் உலா வருகின்றன. இதற்கிடையில் நடிகர் சிம்பு, மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். 'STR 48' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...... ரசிகர்கள் அதிர்ச்சி!இந்நிலையில் STR 48 படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது பல மாதங்கள் கடந்தும் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் தொடங்கப்படாத நிலையில் படமானது வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கை மாறப்போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் STR 48 படத்தை தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ