ஜிவி பிரகாஷ் – மமிதா கூட்டணியில் ரிபெல்… புதிய பாடல் வௌியீடு…
- Advertisement -
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரிபெல் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகங்களாக கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு கோலிவுட் நட்சத்திரம் ஜிவி பிரகாஷ். வெயில் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான இவர், கிட்டத்தட்ட 100 படங்ளுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இது தவிர பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பாடல்கள்பாடி உள்ளார். இசையைத் தொடர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் டார்லிங் படத்தின் மூலம் நாயகனாவும் கோலிவுட் திரையுலகில் அவதாரம் எடுத்தார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் ரிபெல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் தான் இதில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் சி வி குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிபெல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன
படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், படத்திலிருந்து தற்போது புதிய பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.