spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷுக்கு எதிராக நயன்தாரா குறிப்பிட்ட ஜெர்மன் சொல்லின் அர்த்தம் இது தான்!

தனுஷுக்கு எதிராக நயன்தாரா குறிப்பிட்ட ஜெர்மன் சொல்லின் அர்த்தம் இது தான்!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் வருகின்றன நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் திரைத்துறையில் பூகம்பம் கிளம்பியுள்ளது.தனுஷுக்கு எதிராக நயன்தாரா குறிப்பிட்ட ஜெர்மன் சொல்லின் அர்த்தம் இது தான்! அதாவது நானும் ரெளடி தான் என்ற படத்தின் போது தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி அவர்களின் காதல் மலர்ந்ததன் நினைவாக நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்களின் திருமண ஆவணப்படத்தில் இணைக்க விரும்பி அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷின் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் நடிகர் தனுஷ் இரண்டு வருடங்களாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் ஆவணப்பட ட்ரைலர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லரில் நானும் ரெளடி தான் படத்தின் 3 வினாடிக் காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில் அதற்கு 10 கோடி இழப்பீடு வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தனுஷ். எனவே தனுஷின் இந்த செயலை சுட்டிக்காட்டி அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் அவருடைய இந்த செயலினால் நானும் ரெளடி தான் பட காட்சிகள் இல்லாமலேயே தங்களின் ஆவணப்படம் வெளியாக போவதாகவும் வருத்தம் தெரிவித்தும் தனுஷை குற்றம் சாட்டியும் மிக நீளமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. இந்த அறிக்கை வெளியான பின்பு சமூக வலைதளங்களில் இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறது. ஏனென்றால் தனுஷுக்கு எதிரான நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு முன்பு முகமூடி அணிந்து திரிவதாகவும் அவர் பல விழாக்களில் ரசிகர்கள் முன்பு பேசும் வார்த்தையை தனது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் எனவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். தனுஷுக்கு எதிராக நயன்தாரா குறிப்பிட்ட ஜெர்மன் சொல்லின் அர்த்தம் இது தான்!இவ்வாறு பல விஷயங்களை சுட்டிக்காட்டி தனுஷை சாடி இருந்தார் நயன்தாரா. அதில் ஒன்றுதான் schadenfreude என்ற ஜெர்மன் சொல். அதாவது நயன்தாரா குறிப்பிட்டு இருந்த schadenfreude என்ற ஜெர்மன் சொல்சொல்லை குறிப்பிட்டு இந்த சொல்லை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். எனவே அதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு இனி யாருக்கும் அதுபோல் செய்யாமல் இருங்கள் என்று தெரிவித்திருந்தார். தற்போது அந்த ஜெர்மன் சொல்லிற்கான அர்த்தம் தெரியவந்துள்ளது. அதாவது
மற்றவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைவது போட்டியாளர் ஒருவரின் துரதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவது”  என்பதுதான் அந்த ஜெர்மன் சொல்லின் பொருளாகும்.

MUST READ