Homeசெய்திகள்சினிமாநான் 'கூலி' படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு இதுதான் காரணம்.... நடிகர் உபேந்திரா!

நான் ‘கூலி’ படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு இதுதான் காரணம்…. நடிகர் உபேந்திரா!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. நான் 'கூலி' படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு இதுதான் காரணம்.... நடிகர் உபேந்திரா!அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரஜினியின் 171 வது படமான இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் ஜெயிலர் திரைப்படத்தைப் போல இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணமாகும். அதாவது பல வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்தது கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் செய்ய பட குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது. நான் 'கூலி' படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு இதுதான் காரணம்.... நடிகர் உபேந்திரா!இந்நிலையில் நடிகர் உபேந்திரா, கூலி திரைப்படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். “லோகேஷ் கனகராஜ் என்னை நேரில் சந்தித்து கூலி திரைப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்பதை மட்டும் சொன்னார். நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டேன். எனக்கு ரஜினி வரும் காட்சிகளில் பக்கத்தில் இருந்தால் மட்டும் போதும் என்று சொன்னேன். நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. பணம் என்பது எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஒரே ஒரு பெயர் மட்டும் போதும். ரஜினிகாந்த் படத்தில் நடிக்க முடியாது என்று யார்தான் சொல்வார்கள்” என்று கூறியுள்ளார் உபேந்திரா.

MUST READ