சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் தெரிய வந்துள்ளது.
சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ‘சூர்யா 42‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ் லீ, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு பான் இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டில் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் டைட்டில் தற்போதே தெரிய வந்துள்ளது. படத்திற்கு கங்குவா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். மிகவும் வித்தியாசமான டைட்டில் தான்.
ஆந்திராவில் தலித்துகள் அதிகம் வாழும் ஒரு கிராமத்தின் பெயர் தான் கங்குவா என்று கூறப்படுகிறது.