தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 14.04.2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், The Grand Project in a Grand event! The Wait is over என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
A Grand Project in a Grand event !🔥
The wait is over💥@Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @UV_Creations #Vamsi #Pramod @kegvraja @ThisIsDSP @vetrivisuals @directorsiva #editornishadyusuf @supremesundar @PeterHeinOffl @WetaWorkshop #penstudios pic.twitter.com/CMsNnQnv6M— @Studio Green (@studiogreen22) March 12, 2023