Homeசெய்திகள்சினிமாரஜினிக்காக என்னை மாற்ற முடியாது.... 'வேட்டையன்' படம் குறித்து டிஜே ஞானவேல்!

ரஜினிக்காக என்னை மாற்ற முடியாது…. ‘வேட்டையன்’ படம் குறித்து டிஜே ஞானவேல்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.ரஜினிக்காக என்னை மாற்ற முடியாது.... 'வேட்டையன்' படம் குறித்து டிஜே ஞானவேல்! இதற்கு முன்பாக ரஜினி, ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியின் 170வது படமான இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ராணா டகுபதி நடித்திருக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். ரஜினிக்காக என்னை மாற்ற முடியாது.... 'வேட்டையன்' படம் குறித்து டிஜே ஞானவேல்!அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “ரஜினி சார் இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறார். என்கவுண்டரில் அவருடைய நிலைப்பாடு என்ன? அவருக்கு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் கதை. ரஜினி சாருக்காக என்னை முழுவதுமாக மாற்ற முடியாது. எனக்காகவும் அவரை மாற்ற முடியாது. இயல்பிலேயே மக்கள் ரஜினி சாரிடமிருந்து ஸ்டைல் போன்ற பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அதனால் அவருடைய இமேஜுக்கும் அவருடைய சாம்ராஜ்யத்திற்கும் ஏற்றவாறு என்னால் முடிந்ததை கொடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ