Homeசெய்திகள்சினிமாதிரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ரோட்'....ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ரோட்’….ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

தி ரோட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு திரிஷா பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் , விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் அருள் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் திரைப்படத்தில் நடித்துள்ளார் . AAA சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு அமைத்துள்ளார். இதில் திரிஷாவுடன் இணைந்து மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் சபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த சில சம்பவங்களை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தி ரோட் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ