Homeசெய்திகள்சினிமாஓடிடியில் வெளியானது ஊர்வசியின் J.பேபி!

ஓடிடியில் வெளியானது ஊர்வசியின் J.பேபி!

-

ஊர்வசியின் J. பேபி ஓடிடியில் வெளியாகி உள்ளது.ஓடிடியில் வெளியானது ஊர்வசியின் J.பேபி!

பிரபல நடிகை ஊர்வசி தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருக்கும் இவர் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ஊர்வசி நடிப்பில் உருவான J. பேபி பேபி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை சுரேஷ் மாரி எழுதி இயக்க டோனி பிரிட்டோ இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஊர்வசி சில இடங்களில் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதே சமயம் வயதான காலத்தில் குழந்தைகளாக மாறும் அம்மாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எமோஷனலான கதைக்களத்தில் எடுத்துக் கூறியிருந்தார் படத்தில் இயக்குனர். ஓடிடியில் வெளியானது ஊர்வசியின் J.பேபி!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ