வாழை படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வாழை. இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் எப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் வாழை திரைப்படத்தின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தொழிலாளிகளின் ரணத்தை திரைக்கதையின் வழியே கடத்தியுள்ளார் செல்வராஜ். இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே திரை பிரபலங்கள் பலருக்கும் போட்டுக் காட்டப்பட்டிருந்த நிலையில் பலரும் இப்படத்தை பாராட்டி வந்தனர். இந்நிலையில் இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 23) வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி முதல் நாளில் இப்படம் ரூ.1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.