Homeசெய்திகள்சினிமாவடிவேலு எங்கள வயிறு வலிக்க ரிக்க வச்சுட்டாரு... ஏஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி!

வடிவேலு எங்கள வயிறு வலிக்க ரிக்க வச்சுட்டாரு… ஏஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி!

-

- Advertisement -

‘மாமன்னன்’ படத்தின் இசை உருவாக்கத்தில் வடிவேலு உடன் அதிக நேரம் சிரித்து மகிழ்ந்ததாக ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக  நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில், நடிகர் வடிவேலு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனைத்து கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது படத்தின் இசையமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை உருவாக்கத்தில் வடிவேலு உடன் அதிக நேரம் சிரித்து மகிழ்ந்ததாக ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“நம்ம வைகை புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தேன். அவர் எங்களை முழுவதும் சிரிக்க வைத்து எங்கள் அமர்வை மிகவும் மறக்கமுடியாததாக ஆக்கினார்!
மாரி செல்வராஜ் மற்றும் மாமன்னன் குழுவினருடன் சிறப்பான நேரம்.” என்று தெரிவித்துள்ளார்.

மாமன்னன் திரைப்படம் ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் வடிவேலு இதுவரை காணப்படாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

MUST READ