Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்..... புதிய போஸ்டர் வெளியீடு!

வைபவ் நடிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்….. புதிய போஸ்டர் வெளியீடு!

-

நடிகர் வைபவ், சென்னை 600028 – 2, கோவா, சரோஜா, மங்காத்தா என வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் நடித்து பிரபலமானவர். வைபவ் நடிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்..... புதிய போஸ்டர் வெளியீடு!அதன் பின்னர் கதாநாயகனாக களமிறங்கி மேயாத மான், மலேசியா டு அம்னீசியா, கப்பல் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக வைபவ் நடிப்பில் ரணம் திரைப்படம் வெளியானது. திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வைபவ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விக்ரம் ராஜசேகர் மற்றும் அருண் கேசவ் ஆகிய இருவரும் இணைந்து இயக்க பி டி ஜி யுனிவர்ஸல் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.வைபவ் நடிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்..... புதிய போஸ்டர் வெளியீடு! இந்த படத்தில் வைபவ் உடன் இணைந்து அதுல்யா ரவி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூஜை உடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ