Homeசெய்திகள்சினிமாவருண் லாவண்யா ஜோடியின் புகைப்படங்கள் வைரல்

வருண் லாவண்யா ஜோடியின் புகைப்படங்கள் வைரல்

-

பிரபல தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் உறவினருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நடிகை லாவண்யா திரிபாதி தமிழில் சசிகுமார் உடன் ‘பிரம்மன்’ படத்தில் நடித்தார். அதையடுத்து ‘மாயவன்’ படத்தில் நடித்திருந்தார்.

இன்று இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி இத்தாலியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் Theme Wedding செய்துகொள்ள உள்ளது. இவர்கள் திருமணத்தில் தம்பதிகளின் குடும்பங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர். தெலுங்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

இத்தாலியில் திருமணத்தை அடுத்து ஹைதராபாத்தில் ஒரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை லாவண்யா பிறந்து வளர்ந்த டேராடூனில் மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனராம். இந்நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

MUST READ