வீர தீர சூரன் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரமின் 62 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தினை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் கலைவாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இன்று (மார்ச் 27) இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. அதன்படி மும்பையைச் சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்காக முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர்கள் அந்த நிறுவனத்திற்கே கொடுத்துவிட்டார்களாம். ஆனால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இன்னும் இப்படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக இதன் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. எனவே B4U நிறுவனம் தாங்கள் முதலீடு செய்த தொகையில் 50% நஷ்ட ஈடு வழ
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இன்று காலை 10:30 மணி வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இந்த படத்தின் காலை 9:00 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தது இது தொடர்பான விசாரணையில் இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டால் இந்த படம் நண்பகல் 12 மணிக்கு திரையரங்கில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.