Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'வீர தீர சூரன்' புதிய பாடல்!

நாளை வெளியாகும் ‘வீர தீர சூரன்’ புதிய பாடல்!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.நாளை வெளியாகும் 'வீர தீர சூரன்' புதிய பாடல்!

நடிகர் விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.நாளை வெளியாகும் 'வீர தீர சூரன்' புதிய பாடல்! அதன்படி ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது 2025 மார்ச் 27 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘ஆத்தி அடி ஆத்தி’ எனும் புதிய பாடல் நாளை (மார்ச் 5) ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ